
கோப்புப்படம்
நாடு முழுவதும் உள்ள 12 முதல் 14 வயதுடையவர்களுக்கு மார்ச் 16ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றை தடுக்க முக்கிய ஆயுதமாக தடுப்பூசி இருக்கின்றது. இந்தியாவில் கடந்த 2021 ஜனவரி 16ஆம் தேதி முதல் படிப்படியாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட 180 கோடி பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் மத்திய சுகாதாத்துறை இன்று வெளியிட்ட செய்தியில்,
“நாடு முழுவதும் உள்ள 12 முதல் 14 வயதுடைய(2008, 2009, 2010ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்கள்) அனைவருக்கும் மார்ச் 16ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். இவர்களுக்கு ஹைதராபாத்தில் உள்ள பயோலாஜிக்கல் எவன்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.
மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி மார்ச் 16 முதல் செலுத்தப்படும்.”
முன்னதாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 12 முதல் 18 வயதுடையவர்களுக்கு செலுத்திக் கொள்ள இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...