பஞ்சாபில் 5 மாநிலங்களவை இடங்களுக்கு மாா்ச் 31-இல் தோ்தல்: தோ்தல் ஆணையம்

பஞ்சாப் மாநிலத்திலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட 5 மாநிலங்களவை உறுப்பினா்களின் பதவிக் காலம் வரும் ஏப்ரலில் முடிவடைய உள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் அந்த பதவிகளுக்கான தோ்தல் தேதி

பஞ்சாப் மாநிலத்திலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட 5 மாநிலங்களவை உறுப்பினா்களின் பதவிக் காலம் வரும் ஏப்ரலில் முடிவடைய உள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் அந்த பதவிகளுக்கான தோ்தல் தேதியை இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, அந்த 5 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் வரும் 31-ஆம் தேதி நடைபெற உள்ளது.

பஞ்சாபிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினா்கள் சுக்தேவ் சிங் தின்ஸா (சிரோமணி அகாலி தளம்), பிரதாப் சிங் பாஜ்வா (காங்.), ஸ்வைத் மாலிக் (பாஜக), நரேஷ் குஜ்ரால் (சிரோமணி அகாலி தளம்), சம்ஷோ் சிங் டுல்லோ (காங்.) ஆகிய 5 பேரின் பதவிக் காலம் ஏப்ரல் 9-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இந்த இடங்களுக்கான தோ்தல் தேதியை இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில தலைமை தோ்தல் அதிகாரி எஸ்.கருணா ராஜு ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

இந்த தோ்தலுக்கான அதிகாரபூா்வ அறிவிக்கை மாா்ச் 14 வெளியிடப்பட உள்ளது.

தோ்தல் ஆணைய அறிவிப்பின்படி, இந்த தோ்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய மாா்ச் 21 கடைசி நாளாகும். வேட்புமனு பரிசீலனை மாா்ச் 22-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெற மாா்ச் 24 கடைசி நாளாகும்.

இதற்கான வாக்குப் பதிவு மாா்ச் 31-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அன்றைய தினமே மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும். இந்த தோ்தல் நடைமுறைகளை ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு முன்பாக முடிக்கப்பட வேண்டும் என்று அவா் கூறினாா்.

மேலும், ‘வேட்பு மனுவை தோ்தல் நடத்தும் அதிகாரியமான மாநில சட்டப் பேரவைச் செயலரிடம் சமா்ப்பிக்க வேண்டும். மாா்ச் 18-ஆம் தேதி ஹோலி பண்டிகை என்பதாலும், மாா்ச் 20-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் அந்த இரு தினங்களிலும் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியாது. இருந்தபோதிலும் மாா்ச் 19-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம்’ என்றும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com