
பகவந்த் மான்
பஞ்சாப் முதல்வராக பதவியேற்கவுள்ள நிலையில் மக்களவை உறுப்பினர் பதவியை பகவந்த் மான் இன்று ராஜிநாமா செய்தார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் பேரவைகளுக்கான தேர்தலின் முடிவுகள் கடந்த வாரம் வெளியாகின. இதில், பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை ஆம் ஆத்மி கைப்பற்றியது.
ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக சங்கரூர் தொகுதி மக்களவை உறுப்பினர் பகவந்த மான் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | பஞ்சாபை தொடர்ந்து குஜராத், ஹிமாச்சலை குறிவைக்கும் ஆம் ஆத்மி
இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியில் இன்று கலந்துகொண்ட பகவந்த், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.
பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக நாளை மறுநாள் பகவந்த் மான் பதவியேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.