கனடாவில் சாலை விபத்து: இந்திய மாணவர்கள் 5 பேர் பலி

கனடாவின் டொரோண்டோ நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழந்ததாக, கனடாவுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
கனடாவில் சாலை விபத்து: இந்திய மாணவர்கள் 5 பேர் பலி
Published on
Updated on
1 min read


டொராண்டோ: கனடாவின் டொரோண்டோ நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழந்ததாக, கனடாவுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

கனடாவின் டொரோண்டா நகரின் அருகே சனிக்கிழமை டிராக்டர் டிரைலர் மீது பயணிகள் வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இந்திய மாணவர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  மேலும் 2 மாணவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் 5 பேரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

உயிரிழந்த  மாணவர்கள் ஹர்பிரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங், கரன்பால் சிங், மோஹித் சவுகான் மற்றும் பவன் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கனடாவுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது: 

கனடாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 5 இந்திய மாணவர்களின்
குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இந்திய தூதரகம் அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com