ஹிந்தியில் பதிலளித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் புதன்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மக்களவையில் இன்று நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக துறையின் கீழ் மக்களவை உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பதிலளித்து வருகிறார்.
அப்போது தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, “தமிழகம் போன்ற மாநிலங்கள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசப் பொருள்கள் விநியோகித்து வருகிறோம். ரேஷன் என்பது மாநிலம் சார்ந்த விவகாரம். இத்தகைய சூழலில் ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் வெளி மாநிலங்களிலிருந்து வரும் புலம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கும் பொருள்களுக்கு யார் நிதி ஒதுக்குவது என கேள்வி எழுப்பினார்”
இந்த கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஹிந்தியில் பதிலளிக்க முயன்றபோது குறுக்கிட்ட கனிமொழி, உங்களுக்கு ஆங்கிலம் நன்றாக பேசத் தெரியும். நான் ஆங்கிலத்தில்தான் கேள்வி கேட்டேன் நீங்களும் ஆங்கிலத்தில் பதில் கூறுங்கள். ஹிந்தியில் பேசினால் எனக்கு சரியாக புரியாது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, சகோதரியை மதிப்பதாக கூறிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆங்கிலத்தில் பதிலளித்தார்.
மேலும், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து உணவு வகைகளுக்கும் 100 சதவீதம் மத்திய அரசே நிதி வழங்கும் என பியூஸ் கோயல் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருக்குறள் திருப்பணி வகுப்புகள் நிறைவு

போா் எதிா்ப்பு வாசகங்களோடு பணிபுரிந்த அரசு ஊழியா்கள்

நாகை, திருவாரூா், மயிலாடுதுறையில் வணிக சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு

வெட்டாறு தூா்வாரும் பணி தொடக்கம்
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

