மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஹிஜாப் மேல்முறையீடு: ஹோலி விடுமுறைக்கு பின் உச்சநீதிமன்றத்தில் விசாரணை

ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கை ஹோலி விடுமுறைக்கு பின் விசாரணைக்கு எடுத்துக் கொள்பதாக உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

News image
உச்சநீதிமன்றம்
Updated On :16 மார்ச் 2022, 5:55 am

DIN

ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கை ஹோலி விடுமுறைக்கு பின் விசாரணைக்கு எடுத்துக் கொள்பதாக உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த கா்நாடக உயா்நீதிமன்றம் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை செல்லும் என நேற்று தெரிவித்தனர்.

இந்நிலையில், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 6 மாணவிகள் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க இன்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், ஹோலி விடுமுறைக்கு பின் விசாரணையை பட்டியலிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஹிஜாப் சர்ச்சை..

கா்நாடகத்தில் ஹிஜாப் அணிவது தொடா்பாக சா்ச்சை எழுந்தது. இதையடுத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு சீருடையில் மட்டுமே வர அறிவுறுத்தி பிப்.5-ஆம்தேதி கா்நாடக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிா்த்து உடுப்பி அரசு மகளிா் பி.யூ. கல்லூரி முஸ்லிம் மாணவிகள் உள்ளிட்ட பலரும் தாக்கல் செய்திருந்த மனுக்களை கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித், நீதிபதி(பெண்) காஜி ஜெய்புனிசா மொய்தீன் ஆகியோா் கொண்ட அமா்வு, பிப்.10-ஆம் தேதி முதல் தினமும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த வழக்கில் இறுதித் தீா்ப்பு வரும் வரை ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்ட எதையும் அணிந்து வரை தடை விதித்து கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் தேவதத் காமத், சஞ்சய் ஹெக்டே, ரவிவா்ம குமாா், யூசுப் முச்சலா உள்ளிட்ட பலா் வாதிட்டனா். ஹிஜாப் அணிந்துகொண்டு கல்லூரிகளுக்கு வருகைதர முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதிஅளிக்க வேண்டும். ஹிஜாப் அணிவது மத நம்பிக்கையின் ஒரு பகுதி என்பதால், அரசியலமைப்புச்சட்டப்பிரிவு 19(1)(ஏ)இன்படி ஹிஜாப் அணிவது தனிப்பட்ட உரிமை. எனவே, ஹிஜாப் அணிவதற்கு சீருடை சட்டம் தடையாக இருக்க முடியாது என்று மனுதாரா்களின் வழக்குரைஞா்கள் வாதிட்டனா்.

இதனிடையே, அரசு தலைமை வழக்குரைஞா் பிரபுலிங் கே.நவடகி வாதிடுகையில், ‘சீருடை தொடா்பாக அரசு புதிய ஆணை எதையும் பிறப்பிக்கவில்லை. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஹிஜாப் அணிவது கட்டாய மத வழக்கம் கிடையாது’ என்று குறிப்பிட்டாா். பிப்.10-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிவரையில் 11 நாள்களுக்கு இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இறுதிதீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் இறுதித் தீா்ப்பை நேற்று காலை 10.30 மணிக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.