தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகத் தகவல்...

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் (கோப்புப் படம்) - ANI

Published On :

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என ஐக்கிய ஜனதா தளத்தின் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.

பிகார் முதல்வரின் இல்லத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயல்தலைவர் சஞ்சய் ஜா மற்றும் அமைச்சர் விஜய் குமார் சௌதரி ஆகியோருடன் புதன்கிழமை (மார்ச் 4) நடைபெற்ற ஆலோசனையில் இந்தப் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிகாரில் கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றது. இதன்மூலம், நிதீஷ் குமார் மீண்டும் பிகாரின் முதல்வராகப் பதவியேற்றார்.

இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகிப்பது குறித்து முதல்வர் நிதீஷ் குமார்தான் முடிவு செய்ய வேண்டுமென ஐக்கிய ஜனதா தளத்தின் சட்டப் பேரவை மேலவை உறுப்பினர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார்.

இத்துடன், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்பதற்காக தனது முதல்வர் பதவியை நிதீஷ் குமார் விரைவில் ராஜிநாமா செய்யவுள்ளதாகவும், நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் சட்டப் பேரவையின் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு பிகாரின் துணை முதல்வராகப் பதவியேற்கவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, நாட்டின் 10 மாநிலங்களை உள்ளடக்கிய 37 உறுப்பினர்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வரும் மார்ச் 16 அன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Reports have emerged that Bihar Chief Minister Nitish Kumar will be elected as a member of the Rajya Sabha.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.