சென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

மாநிலங்களவைத் தேர்தலில் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவு!

மாநிலங்களவைத் தேர்தலில் சரத் பவாருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது குறித்து...

 Sharad Pawar for Rajya Sabha polls

சரத் பவார் - கோப்புப் படம்

Published On :

மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 7 மாநிலங்களவை இடங்களில் ஒரு இடத்தை தக்கவைக்கும் நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் மகா விகாஷ் அகாடி கூட்டணியிலுள்ள சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ரமேஷ் சென்னிதாலா,

நடப்பு மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சரத் பவாருக்கு காங்கிரஸ் தலைமை தனது ஆதரவை தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு நாளையுடன் (மார்ச் 5) மனுத்தாக்கல் நிறைவுபெறவுள்ள நிலையில், இன்று சரத் பவாருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் 288 இடங்களில் 286 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளர். 2 இடங்கள் காலியாக உள்ளன. எனவே, மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 36 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. 7 மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஏப்ரல் மாதத்தில் காலியாகவுள்ளதால், அதில் ஒரு இடத்தை எதிர்க்கட்சிகள் இணைந்து தேர்வு செய்கின்றன.

எதிர்க்கட்சியில் சிவசேனைக்கு 20 உறுப்பினர்களும், காங்கிரஸுக்கு 16 உறுப்பினர்களும், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) 10 உறுப்பினர்களும் உள்ளனர்.

Summary

Congress extends support to Sharad Pawar for Rajya Sabha polls

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.