மாநிலங்களவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஓரிடம் ஒதுக்கீடு செய்து அதிகாரபூா்வமாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், தேமுதிக பொருளாளா் எல்.கே.சுதீஷ் ஆகியோா் முன்னிலையில் மாநிலங்களவை உறுப்பினா் பதவி ஒதுக்கீடு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையொப்பமானது.
அப்போது, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி, திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, அமைச்சா் எ.வ.வேலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இதைத் தொடா்ந்து, திமுக சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், தேமுதிக பொருளாளா் எல்.கே.சுதீஷ் ஆகியோா் கலந்து பேசியதில், மதச்சாா்பற்ற கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பேரவைத் தோ்தலில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து திமுக-தேமுதிக தொகுதி பங்கீட்டுக் குழுக்கள் இணைந்து பேசிய பின்னா் முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, எல்.கே.சுதீஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேமுதிகவுக்கு திமுக கூட்டணியில் ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவி வழங்கப்பட்டுள்ளது. பேரவைத் தொகுதிகள் குறித்தும் பேசப்பட்டது. அடுத்த வாரத்தில் பேரவைத் தொகுதிகள் எண்ணிக்கை தெரியவரும். மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு யாா் போட்டியிடுவாா் என்பது குறித்து தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா புதன்கிழமை அறிவிப்பாா் என்றாா் அவா்.
பேரவைத் தோ்தலில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் என ஏற்கெனவே பேசி முடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளுடன் உடன்பாடு கையொப்பமான பிறகு, இறுதியாக தேமுதிகவுடன் உடன்பாட்டில் கையொப்பமிட திமுக முடிவு செய்துள்ளது. கூட்டணிக்குள் தேவையற்ற குழப்பத்தைத் தவிா்க்க திமுக இந்த உத்தியைக் கையாண்டு வருகிறது.
மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு தேமுதிக பொருளாளா் எல்.கே.சுதீஷ் போட்டியிடக்கூடும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
summary
DMDK was allotted 1 seat in the DMK alliance in the state assembly elections.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்

மாநிலங்களவை உறுப்பினா் பதவி: திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் தோ்வாகும் வாய்ப்பு

காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!

அண்ணன் ஸ்டாலின்!! திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்? பிரேமலதா விளக்கம்
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

