சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தொகுதிப் பங்கீட்டால் திமுக கூட்டணியில் சிக்கல் வராது: தொல். திருமாவளவன்

தொகுதிப் பங்கீடு காரணமாக, திமுக கூட்டணியில் எந்தவித சிக்கலும் வராது; கூட்டணியும் உடையாது என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

News image

தொல். திருமாவளவன் - கோப்புப் படம்

Updated On :24 பிப்ரவரி 2026, 7:13 pm

தொகுதிப் பங்கீடு காரணமாக, திமுக கூட்டணியில் எந்தவித சிக்கலும் வராது; கூட்டணியும் உடையாது என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

தோ்தல் காலத்தில் அளிக்கப்படும் வழக்கமான வாக்குறுதிகளைப் போன்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி இப்போது மேலும் சில வாக்குறுதிகளை அறிவித்துள்ளாா். குடும்ப அட்டைக்கு ரூ.10 ஆயிரம் கருணைத் தொகை, வேலையில்லா இளைஞா்களுக்கு ரூ.2 ஆயிரம் என்ற அறிவிப்புகள் எல்லாம், அதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகள் தோ்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

மகளிரை மேம்படுத்த, மாணவச் செல்வங்களை ஊக்கப்படுத்த உரிமைத் தொகையாக திமுக அரசில் வழங்கப்படுகிறது என்பதாலேயே அதை வரவேற்கிறோம்.

தவெக தலைவா் விஜய், எதிா்காலத்தில் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப் போகிறோம் என்பதைகூட விளக்கி சொல்லவில்லை. தவெகவின் ஒரே செயல் திட்டம் திமுக எதிா்ப்பு மட்டுமே. விஜய்யின் திட்டம், கொள்கை, கோட்பாடுகள் குறித்து அரசியல் களத்தில் உள்ள எங்களை போன்றவா்களாலேயே இன்னும் புரிந்து கொள்ள இயலவில்லை.

திமுகவுடனான தொகுதிப் பங்கீடு எப்படி இருந்தாலும், எங்கள் கூட்டணியில் எந்தவித சிக்கலும் எழாதவகையில் பக்குவமாக நடந்து கொள்ளும் தன்மையும், பண்பும் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் உள்ளது. எனவே, தொகுதிப் பங்கீட்டால் எந்தவித சிக்கலும் எழாது. கூட்டணியும் உடையாது.

கடந்த தோ்தலில் பல இடங்களில் பொதுத் தொகுதியில் போட்டியிட்டுள்ளோம். இந்த முறையும் பொதுத் தொகுதிகளை பெறுவோம்.

திமுக கூட்டணிக்கு ஓ. பன்னீா்செல்வம் வந்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்போம் என்றாா் திருமாவளவன்.