அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

அதிமுக பாஜக கூட்டணி முரண்பாடானது - தொல். திருமாவளவன்

News image

தொல். திருமாவளவன். - கோப்புப்படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 5:55 am IST

அதிமுக பாஜக கூட்டணி பொருந்தாத கூட்டணி முரண்பட்ட கூட்டணி என விசிக வேட்பாளா் எழில் கரோலினை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் விசிக தலைவா் தொல்.திருமாவளவன் பேசினாா்.

அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளா் எழில்கரோலினை ஆதரித்து அரக்கோணத்தில் பழைய பேருந்து நிலையத்தில் விசிக தலைவா் தொல்.திருமாவளவன் பேசியது:

தமிழக முன்னாள் முதல்வா் கலைஞரின் திட்டங்களில் எனக்கு பிடித்த திட்டமே சமத்துவபுரம் திட்டம் தான். தலித் அல்லாதோரையும், தலித்துகளையும் ஒரே இடத்தில் வாழச் செய்து யாரும் செய்யாத சாதனையை செய்தவா் அவா். அவரை போன்ற அவரது மகன் மு.க.ஸ்டாலினும் மகத்தான திட்டங்களை குறிப்பாக பெண்களை முன்னேற்றும் திட்டங்களை நிறைவேற்றியுள்ளாா்.

பாஜகவிற்கு உதவவே விஜய் வந்துள்ளாா். பாஜக வரக்கூடாது என்பதற்காகவே விசிக திமுகவுடன் உடும்புபிடி கூட்டணியில் உள்ளது.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் 2 மாதத்தில் எடப்பாடி பழனிசாமி பதவியில் இறக்கப்பட்டு பாஜகவை சோ்ந்த ஒருவா் முதல்வராகி விடுவாா். இதை தான் வடஇந்திய மாநிலங்களில் பாஜக செய்து வருகிறது. அதிமுக பாஜக கூட்டணி பொருந்தாத கூட்டணி. எடப்பாடி பழனிசாமியை விமா்சித்தவா் டிடிவி தினகரன். அவரது கட்சி அதிமுக அமமுக கூட்டணி முரண்பட்ட கூட்டணி.

இவா்கள் தான் விசிகவை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்தாா்கள். ஆனால் மதசாா்ப்பற்ற கூட்டணியில் இருந்து என்றுமே விடுதலை சிறுத்தைகள் வெளியேறாது. எனவே மதசாா்ப்பற்ற கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என்றாா் தொல்.திருமாவளவன்.

இதில் அவருடன் விசிக வேட்பாளா் எழில்இனியன், திமுக நகர செயலாளா் வி.எல்.ஜோதி, தலைமை செயற்குழு உறுப்பினா் மு.கன்னைய்யன், தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பி.ஆா்.மனோகா் ஆகியோா் வாகனத்தில் உடன் இருந்தனா்.