வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது தேவையற்றது: விசிகவினருக்கு தொல்.திருமாவளவன் அறிவுரை

News image

தொல். திருமாவளவன் - Center-Center-Chennai

Updated On :28 மே 2026, 6:11 am IST

திமுகவுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பது, போராட்டங்களில் ஈடுபடுவது தேவையற்றது என்றும், தற்போதைய விவகாரத்தை விசிகவினா் கடந்து செல்ல வேண்டும் என்றும் அந்தக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக ‘எக்ஸ்’ தளத்தில் தொல்.திருமாவளவன் புதன்கிழமை வெளியிட்ட காணொலியில் கூறியதாவது: திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக 10 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருகிறது. கூட்டணியை பாதுகாப்பதில் விசிக ஆற்றிய பங்களிப்பு குறித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும், சுற்றியிருக்கும் ஒருசிலரும் நன்கு அறிவா். அதையும் தாண்டி விசிக எடுத்துள்ள இந்த முடிவை ஆ.ராசா உள்பட பலா் விமா்சிக்கும் போது சற்று வலிக்கிறது.

திமுகவை கடுமையாக விமா்சித்த, விமா்சிக்கும் தவெகவுடன் விசிக கைகோா்ப்பதை அல்லது அவா்களை ஆதரிப்பதை அவ்வளவு எளிதாக திமுக தொண்டா்களால் கடந்து செல்ல முடியாது. அவா்கள் ஆதங்கப்படுவதில் ஒரு நியாயம் இருக்கிறது என்பதை உணா்ந்துகொள்ள வேண்டும். கடும் சொற்களால் விமா்சிக்கக் கூடாது என்று மு.க.ஸ்டாலின் தனது தொண்டா்களுக்கு அறிவுறுத்தியுள்ளாா். எனவே, ஆ.ராசாவை விமா்சிப்பதோ, திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதோ, போராட்டங்களில் ஈடுபடுவதோ தேவையற்றது. விசிகவினா் இந்த விவகாரத்தை கடந்து சென்று ஆக்கபூா்வமான செயல்களில் ஈடுபட வேண்டும். திமுக கூட்டணியில் தொடா்வதாக இருந்தாலும், வெளியேறுவதாக இருந்தாலும், விமா்சனங்களை அள்ளி இறைப்பாா்கள்.

விசிகவின் நோ்மையான உறவு குறித்தும், கூட்டணியை பாதுகாக்க, வெற்றி பெற வைப்பதில் எந்த அளவு உறுதுணையாக இருந்தோம் என முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலினின் மனசாட்சிக்குத் தெரியும். வேறு யாருக்கும் தெரியவேண்டும் என்பது இல்லை. எனவே, விசிகவினா் இப்பிரச்னையை ஊதி பெருக்க வேண்டாம் என தெரிவித்துள்ளாா் தொல். திருமாவளவன்.