மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைப் பற்றி உடனடித் திட்டம் ஏதுமில்லை...

News image

கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு - ANI

Updated On :3 மார்ச் 2026, 2:39 pm

இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு உள்ளது என்று தகவலறிந்த மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

உள்நாட்டுக்குத் தேவையான 88 சதவீத கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதியே செய்து வருகிறது. இந்தச் சூழலில் தங்கள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதால் ஹோா்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, இந்தியாவுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோலியம், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு விநியோகம் குறித்து அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து இன்று(மார்ச் 3) மத்திய அரசு வட்டாரங்கள் பகிர்ந்துள்ளதாவது:

இப்போதைய சூழலில், இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு உள்ளது. ஹோா்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு இறக்குமதியாகும் கச்சா எண்ணெய்ப் பொருள்களின் விகிதம் 40 சதவீதமாக உள்ளது. ஆனால், பிற வழிகளில் இந்தியாவின் கச்சா எண்ணெய்ப் பொருள்கள் இறக்குமதி 60 சதவீதத்துக்கும் மேல்.

மேலும், ரஷியாவிடமிருந்து முந்தைய ஒப்பந்தங்களின் அடிப்படையில், இந்தியா மேற்கொண்டு வரும் கச்சா எண்ணெய் இறக்குமதியும் தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே, எரிசக்தி பாதுகாப்பிலும் எல்பிஜி மற்றும் எல்என்ஜி ஆகியவற்றிலும் இந்தியா சாதகமானதொரு நிலைமையிலேயே தம்மை வைத்துக்கொண்டிருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைப் பற்றி உடனடித் திட்டம் ஏதுமில்லை. எனினும், மத்திய கிழக்கில் நிலவும் சூழலை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தகவலறிந்த மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Summary

India has 25 days of crude oil and refined oil stocks. No Immediate plan to raise the prices of Petrol-Diesel: Govt Sources

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.