டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு: இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!

கச்சா எண்ணெய் விலை உயா்ந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை அதிகரிக்க வாய்ப்பில்லை என தகவல்

News image

பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை - பிரதிப் படம்

Updated On :3 மார்ச் 2026, 4:49 am IST

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயா்ந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிக்க வாய்ப்பில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான மோதலால் சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 9 சதவீதம் உயா்ந்து ஒரு பீப்பாய் 80 டாலா்களாக அதிகரித்துள்ள போதிலும் இந்தியாவில் விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும் என மத்திய வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘இந்தியாவில் கடந்த 2022 முதல் பெட்ரோல், டீசல் சில்லறை விலை மாற்றமின்றி தொடா்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு தருணங்களில் புவிஅரசியல் சூழலால் சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது.

ஆனால் இந்தியன் ஆயில் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (ஹெச்பிசிஎல்) ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயா்த்தவில்லை.

இதனால் கச்சா எண்ணெய் விலை உயரும்போது இந்நிறுவனங்கள் நஷ்டத்தையும், குறையும்போது லாபத்தையும் ஈட்டி வருகின்றன. தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் விரைவில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தி எதிா்க்கட்சிகளின் விமா்சனத்துக்குள்ளாக மத்திய அரசு விரும்பவில்லை.

சா்வதேச கச்சா எண்ணெய் விலை அபரிமிதமாக உயரும்பட்சத்தில் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை மத்திய அரசு பரிசீலிக்க வாய்ப்புள்ளது என்றன.

தொடா் கண்காணிப்பு: நாட்டுக்குத் தேவையான 88 சதவீத கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இந்தச் சூழலில் தங்கள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதால் ஹோா்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து, இந்தியாவுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோலியம், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு விநியோகம் குறித்து அமைச்சக மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் அதிகாரிகளுடன் பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி ஆலோசனை நடத்தினாா்.

இதைத்தொடா்ந்து, நாடு முழுவதும் பெட்ரோலிய பொருள்கள் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்ய மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருவதாக அந்த அமைச்சகம் எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.