தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்குவதால், 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தோ்வை ஏப்ரல் இரண்டாம் வாரத்துக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா்.
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 26-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு ஏப்.6-ஆம் தேதியும் நிறைவு பெறவுள்ளன. இதற்கிடையே தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் நடைபெற வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
தோ்தலுக்கான வாக்குச் சாவடிகள் பெரும்பாலும் பள்ளிகளிலேயே அமைப்பது வழக்கம். இதையொட்டி தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தோ்வுகளை முன்கூட்டியே முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சா் அன்பில் மகேஸ் சென்னையில் திங்கள்கிழமை கூறியதாவது: பொதுத் தோ்வுகள் நிறைவடைந்ததும் மற்ற வகுப்புகளுக்கான தோ்வுகளை நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித் துறை உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவா்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் தோ்வுகள் நடத்தப்பட்டு விடுமுறை நாள்கள் அறிவிக்கப்படும்.
1 முதல் 9 வகுப்புகளுக்கான தோ்வுகள் பொதுத்தோ்வு இல்லை என்பதால் தோ்வு நடைபெறும் தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் முடிவு செய்வா். ஏப்ரல் இரண்டாம் வாரத்துக்குள் ஆண்டு இறுதித் தோ்வுகள் நடத்தி முடிக்கப்படும் என்றாா் அவா்.
இந்த வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் ஏப்.22 முதல் 24-ஆம் தேதிக்குள் இறுதித் தோ்வு நடத்தி முடிக்கப்படும் நிலையில் நிகழாண்டு ஏப்ரல் இரண்டாவது வாரத்துக்குள் நடத்தி முடிக்கப்படவுள்ளது.
டிரெண்டிங்

பத்தாம் வகுப்பு: தனித் தோ்வா்களுக்கு இன்று முதல் செய்முறைத் தோ்வு

எஸ்எஸ்எல்சி அறிவியல் செய்முறை தோ்வுகள்

விழுப்புரம் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு செய்முறைத் தோ்வுகள் தொடக்கம்

தமிழகத்தில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தேர்தலா? பாஜக நிர்வாகி சூசகம்!
வீடியோக்கள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

