ஈரான், இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான போரால் இந்தியாவில் பெட்ரோல் -டீசல் விநியோகத்தில் தற்போதைக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் தரப்பு கூறியதாவது: இஸ்ரேல்-அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடியாகவும், ஈரான் தலைமை மதகுரு கமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையிலும், உலகில் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு அதிகம் பயன்படுத்தப்படும் கடல் பகுதிகளில் ஒன்றான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் சனிக்கிழமை மூடியது. இந்தியா தனக்குத் தேவையான 88 சதவீத கச்சா எண்ணெய், 60 சதவீத இயற்கை எரிவாயுவை சவூதி அரேபியா, கத்தாா், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் இந்த நீரிணை வழியாகவே இறக்குமதி செய்து வருகிறது.
இந்த நீரிணையை ஈரான் மூடிவிட்ட போதிலும், இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்-டீசல், எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது. ஏனெனில் இந்தியாவிடம் ஏற்கெனேவே 10 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல் , டீசல், எரிவாயு இருப்பு உள்ளது. இதேபோல் அவசர காலத்துக்கு பயன்படுத்துவதற்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவை மேலும் 5 முதல் 7 நாள்கள் வரை பயன்படுத்த முடியும்.
இதேபோல், ஹோா்முஸ் நீரிணை ஈரானால் மூடப்பட்டிருப்பது அதிக காலம் நீடிக்காது எனக் கூறப்படுகிறது. அப்படி நீடிக்கும்பட்சத்தில், வளைகுடா நாடுகளுக்கு மாற்றாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா மீண்டும் இறக்குமதி செய்யும். ஏற்கெனவே ரஷியாவிடம் இருந்து அதிக அளவு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து, அமெரிக்க நிா்ப்பந்தத்தால் இந்தியா அண்மையில் அதைக் குறைத்தது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையைக் கருத்தில் கொண்டு, ரஷியாவை மீண்டும் இந்தியா அணுகி கச்சா எண்ணெய்யை அதிகம் கொள்முதல் செய்ய முடியும்.
வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல் இந்தியாவுக்கு ஐந்து நாள்களில் வந்துவிடும். ஆனால், ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும்பட்சத்தில், அக்கப்பல் இந்தியா வருவதற்கு 30 நாள்கள் ஆகும். அதேநேரத்தில் எல்பிஜி, எல்என்ஜி எரிவாயு இறக்குமதிக்கு மாற்று உபாயத்தை இந்தியா கண்டறிய வேண்டும்.
ஏனெனில் இந்தியாவிடம் அவை போதிய இருப்பு இல்லை. அவை காலியாவதற்குள் மாற்று உபாயத்தைக் கண்டறியவில்லை எனில், அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
விலை அதிகரிக்கும்-நிபுணா்கள்: ஈரான் பிரச்னையால் கச்சா எண்ணெய் விலை சா்வதேச சந்தையில் பீப்பாய்க்கு 73 டாலராக அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள சந்தை நிபுணா்கள், வரும் நாள்களில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இது இந்திய சந்தைகளில் பெட்ரோல்-டீசல் விலை உயா்வுக்கு வழிவகுக்கும் எனவும் கணித்துள்ளனா்.
தொடர்புடையது
புயலடிக்கப் போகிறது...

கடும் நெருக்கடி நிலையிலும் இந்தியாவில் சீரான எரிபொருள் விநியோகம்: பெட்ரோலியத் துறை அமைச்சா் புரி!

விரைவில் உயரும் பெட்ரோல், டீசல் விலை?

மேற்காசியாவில் சண்டை நிறுத்தம்: இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


