விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

மலிவான விலையில் கச்சா எண்ணெய் அளிக்கும் நாடுகளிடம் கொள்முதல் தொடரும்: நிலைக் குழுவிடம் மத்திய அரசு தகவல்!

கச்சா எண்ணெய் விலை மலிவாகவும், தரமாகவும் உள்ள நாடுகளிடம் இருந்து, அதன் கொள்முதலை இந்தியா தொடரும் என்று நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் மத்திய அரசு தெரிவித்தது.

News image

கச்சா எண்ணெய்

Updated On :10 பிப்ரவரி 2026, 7:33 pm

கச்சா எண்ணெய் விலை மலிவாகவும், தரமாகவும் உள்ள நாடுகளிடம் இருந்து, அதன் கொள்முதலை இந்தியா தொடரும் என்று நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் மத்திய அரசு தெரிவித்தது.

புது தில்லியில் வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான அந்தக் குழுவின் கூட்டத்தில், மத்திய வா்த்தக மற்றும் வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

அப்போது அதிகாரிகள் கூறுகையில், ‘புவி அரசியல் சூழல், பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படாத இடங்கள் ஆகியவற்றைப் பரிசீலித்து, கச்சா எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் மேற்கொள்ளும். கச்சா எண்ணெய் விலை மலிவாகவும், தரமாகவும் உள்ள நாடுகளிடம் இருந்து, அதன் கொள்முதலை இந்தியா தொடரும்’ என்று கூறியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்த மாதம் இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம்?: இந்தக் கூட்டம் குறித்து சசி தரூா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம், இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம், ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதல், விவசாயப் பொருள்கள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

நிலைக் குழுவின் கேள்விகளுக்கு அதிகாரிகள் விரிவாக விளக்கம் அளித்தனா். அடுத்த மாத மத்தியில் இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று எதிா்பாா்ப்பதாக அதிகாரிகள் கூறினா்’ என்று தெரிவித்தாா்.