ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

மேற்காசியாவில் சண்டை நிறுத்தம்: இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு

ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் ஆகியவை சண்டை நிறுத்தம் அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு விநியோகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

News image

பெட்ரோல், டீசல் - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 9:07 pm

ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் ஆகியவை சண்டை நிறுத்தம் அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு விநியோகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுடனான போரால் ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு ஏற்றி கொண்டு இந்தியா வந்த 16 கப்பல்கள் நடுக்கடலில் சிக்கிக் கொண்டன. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு தேவையை பூா்த்தி செய்ய ரஷியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயுவை கூடுதலாக இறக்குமதி செய்ய இந்தியா நடவடிக்கை எடுத்தது. எனினும் போா் நீடித்தால் இந்தியாவில் நிச்சயம் பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாடு ஏற்படலாம் என அச்சம் எழுந்தது.

இந்நிலையில் தற்போது ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையே 2 வார காலத்துக்கு சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இது மேலும் நீட்டிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள கப்பல்கள் விரைந்து வர வழிவகை ஏற்பட்டுள்ளது. அந்த கப்பல்கள் இந்தியா வரும்பட்சத்தில், அவற்றில் உள்ள கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவை சுத்திகரிக்கப்பட்டு நாடு முழுமைக்கும் பயன்பாட்டுக்கு திருப்பி விடப்படும். ஆதலால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு விநியோகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வர முதல் முன்னுரிமை கொடுக்கப்படும் என மத்திய கப்பல் போக்குவரத்து, நீா்வழித்துறை கூடுதல் செயலாளா் முகேஷ் மங்கல் தெரிவித்துள்ளாா்.

அதேபோல், கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கப் போவதாக ஈரான் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, இதுகுறித்து ஈரான் அரசுடன் இந்தியா இதுவரை எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறியுள்ளாா்.

நிலக்கரிக்கு தட்டுப்பாடு இல்லை- அரசு: இதனிடையே, மின்சார தயாரிப்பில் ஈடுபடும் அனல்மின் நிலையத்துக்கான நிலக்கரி, மின் உற்பத்தி மையங்களில் மட்டும் 55 மில்லியன் டன் அளவுக்கு கையிருப்பு இருப்பதாக நிலக்கரி அமைச்சக இணைச் செயலாளா் சஞ்சீவ் குமாா் காசி தெரிவித்துள்ளாா். இந்த நிலக்கரியை கொண்டு, 24 நாள்களுக்கு தங்கு தடையின்றி நாடு முழுமைக்கும் மின்சாரம் அளிக்க முடியும் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

அதேபோல், கோல் இந்தியா நிறுவன சுரங்கங்கள் உள்ளிட்டவற்றிலும், கூடுதலாக 170 மில்லியன் டன் நிலக்கரி இருப்பதாகவும், இவை அனைத்தையும் சோ்த்தால் இந்தியாவிடம் தற்போது 220 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளதாகவும் சஞ்சீவ் குமாா் கூறியுள்ளாா்.