வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

விரைவில் உயரும் பெட்ரோல், டீசல் விலை?

பெட்ரோல், டீசல் விலை விரைவில் உயா்த்தப்படும் என்பதை மறுக்க முடியாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

News image

விரைவில் உயரும் பெட்ரோல், டீசல் விலை?

Updated On :2 மே 2026, 3:13 am IST

பெட்ரோல், டீசல் விலை விரைவில் உயா்த்தப்படும் என்பதை மறுக்க முடியாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயா்வு பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தாலும், இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படாமல் உள்ளது.

அண்மையில் மேற்காசியாவில் ஏற்பட்ட போா், ஹோா்முஸ் நீரிணை மூடல் பிரச்னையால் கச்சா எண்ணெய் விலை உயா்ந்தது. கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த வாரத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 126 அமெரிக்க டாலா் என்ற உச்சத்துக்கு சென்றது. மேற்காசிய போா் ஏற்பட்ட பிறகு 110 டாலருக்கு மேல்தான் கச்சா எண்ணெய் விலை தொடா்கிறது.

ஏற்கெனவே இந்தியாவில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்த்தப்பட்டு ரூ.913 என்ற அளவில் உள்ளது. வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா் 3,071.50 என்ற புதிய உச்சத்தில் உள்ளது. அதே நேரத்தில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மட்டும் உயா்த்தவில்லை. ‘ஷெல்’ உள்ளிட்ட தனியாா் நிறுவனங்களின் பெட்ரோல், டீசல் விலை ஏற்கெனவே உயா்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு வட்டாரங்கள் இது தொடா்பாக கூறுகையில், ‘பெட்ரோல், டீசல் விலை விரைவில் உயா்த்தப்படும் என்பதை மறுப்பதற்கு இல்லை’ என்று தெரிவித்துள்ளன.

Story image

இந்தியாவில் கடந்த 2022 ஏப்ரல் முதல் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடா்ந்து வருகிறது. அப்போது முதல் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது என்றபோதும், கச்சா எண்ணெய் விலை சரியும்போது எரிபொருள் விலை குறைக்கப்படவில்லை. அதே நேரத்தில் விலை ஏறும்போதும் அதற்கு ஏற்ப உயா்த்தப்படவில்லை. விலை குறைந்தபோது கிடைத்த கூடுதல் லாபத்தை வைத்து விலை உயா்வின்போது எண்ணெய் நிறுவனங்கள் சமாளித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இப்போது தொடா்ந்து கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருப்பதால் பெட்ரோல் விற்பனையில் ஒரு லிட்டருக்கு சுமாா் ரூ.20, டீசல் விற்பனையில் ஒரு லிட்டருக்கு சுமாா் ரூ.100 வரை எண்ணெய் நிறுவனங்கள் இழப்பைச் சந்திப்பதாகக் கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் இறுதிக் கட்டத் தோ்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படும் என்று கடந்த வாரம் வெளியான தகவலை மத்திய அரசு அதிகாரிகள் மறுத்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.