ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

பெட்ரோல், டீசல் விலையும் விரைவில் உயர்கிறதா?

அரசியல் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 116 டாலரை கடந்து உச்சத்தை எட்டி வருகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 11:48 am

புதுதில்லி: கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 116 டாலரை கடந்து உச்சத்தை எட்டி வருகிறது.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடுமையான உயர்வுக்கு மத்தியிலும், நான்கு ஆண்டுகளாக சில்லறை விலையில் மாற்றமில்லாமல் இருந்ததால், இழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் நிராகரிக்கப்படவில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வாரம், சர்வதேச கச்சா எண்ணெய் விலை, பீப்பாய்க்கு ஒன்றுக்கு 126 அமெரிக்க டாலர் என்ற நான்கு ஆண்டு கால உச்சத்தை எட்டியது. பிறகு சற்று குறைந்தாலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டதாலும், முடங்கியுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் அமெரிக்க மற்றும் ஈரான் தலைவர்கள் வார்த்தைப் போரில் ஈடுபட்டதாலும், பீப்பாய் ஒன்றுக்கு 110 அமெரிக்க டாலருக்கு மேல் நீடித்தது.

முன்னதாக, இன்று காலை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், தொழில்துறை சார்பாக வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச எரிசக்தி விலை அதிகரித்த போதிலும், பெட்ரோல், டீசல் விலையும், உள்நாட்டில் எல்பிஜி விலை உயர்த்தப்படவில்லை. அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள், செலவுக்கு ஏற்ப வர்த்தக எல்பிஜி, தொழில்துறை டீசல், 5-கிலோ எல்பிஜி மற்றும் சர்வதேச விமான நிறுவனங்களுக்கு விற்கப்படும் ஜெட் எரிபொருள் ஆகியவற்றின் விலைகளை உயர்த்தியுள்ளன.

ஏப்ரல் 29 அன்று மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த பிறகு, பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 25 முதல் ரூ. 28 வரை உயரக்கூடும் என சந்தை ஆய்வாளர்கள் முன்னதாகவே சுட்டிக்காட்டியிருந்தனர்.

கடந்த வாரம், எண்ணெய் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி இது குறித்து தெரிவித்ததாவது:

உலகளாவிய எண்ணெய் விலை உயர்ந்த போதிலும், கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக பெட்ரோல் விலை மாற்றமில்லாமல் இருந்ததால், அரசுக்குச் சொந்தமான எரிபொருள் நிலையங்கள், பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு சுமார் ரூ. 20 மற்றும் டீசலில் ஒரு லிட்டருக்கு ஏறக்குறைய ரூ. 100 நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகத் தெரிவித்தார். ஆனாலும், விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு பேரல் ஒன்றுக்கு 70 அமெரிக்க டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, இந்த மாதம் சராசரியாக 114 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

Summary

An increase in petrol and diesel prices in the near future is not ruled out, government sources said on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.