கலால் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள்களை கொண்டு செல்லும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது.
இதன் காரணமாக நாளொன்றுக்கு 120 கப்பல்கள் 2.5 கோடி பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யை அவ்வழியாக எடுத்துச் செல்லும் நிலையில், தற்போது நட்பு நாடுகளின் ஓரிரு கப்பல்களை மட்டுமே ஈரான் அனுமதித்து வருகிறது. இதனால், உலகளாவிய எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலையும் வரலாறு காணாத உச்சமாக ஒரு பீப்பாய் 119 டாலரைத் தொட்டு, தற்போது சற்று குறைந்து 100 டாலராக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், டீசல் மீதான கலால் வரி ரூ. 10-ஐ முழுமையாக ரத்து செய்தும், பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ரூ. 13-ல் இருந்து ரூ. 3 ஆகவும் மத்திய நிதியமைச்சகம் இன்று குறைத்துள்ளது.
விலை குறையுமா?
கச்சா எண்ணெய் தொடர் ஏற்றத்தை அடுத்து, ப்ரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருந்தன.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து, தற்காலிக இழப்பை ஏற்றுக் கொண்டு கடந்த ஒரு மாதமாக விலை ஏற்றத்தை தவிர்த்து வருகின்றன.
இதனிடையே, நயாரா நிறுவனம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5-ம், டீசலுக்கு ரூ. 3-ம் உயர்த்துவதாக வியாழக்கிழமை அறிவித்திருந்தது.
தொடர்ந்து, மற்ற எண்ணெய் நிறுவனங்களும் விலையை ஏற்றும் என்று நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, எண்ணெய் நிறுவனங்களின் விலை ஏற்ற யோசனையைத் தவிர்க்க அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
இதனால், பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.
Summary
Excise duty reduction! Will petrol and diesel prices decrease?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







