ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா?
ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ், குறைந்தபட்ச மாத ஓய்வூதியத் தொகையை ரூ. 7,500-ஆக உயர்த்த நாடாளுமன்றக் குழு பரிந்துரை

குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா? - பிரதிப் படம்
இபிஎஸ் ஓய்வூதியத்தின்கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
தற்போது ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் (EPS-05) வழங்கப்பட்டு வரும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத் தொகையான 1,000 ரூபாயால், அடிப்படை வாழ்க்கைச் செலவுகளைப் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, குறைந்தபட்ச தொகையை ரூ. 7,500-ஆக உயர்த்த வேண்டும் என தொழிலாளர் சங்கங்களும் ஓய்வூதியதாரர் சங்கங்களும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த உயர்வுக்கான கோரிக்கையும் தொடர்ந்து வலுத்து வருகிறது.
இந்த நிலையில், ஓய்வூதியத் தொகையை உயர்த்த நாடாளுமன்றக் குழுவும் பரிந்துரைத்துள்ளது. இந்த முடிவு, நாட்டிலுள்ள லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.
இந்த ஓய்வூதிய மாற்றங்களுடன், நிதியாண்டு 2026ல் கணக்குதாரர்களின் வைப்புநிதியில் 8.25 சதவிகிதம் வட்டி வரவை வழங்கவும் வாய்ப்புள்ளது. இந்த முன்மொழிவு, நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நிலையில், ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், கணக்குதாரர்களின் கணக்குகளில் வட்டி வரவு வைக்கப்படும்.
இதனிடையே, பிஎஃப் பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
Summary
EPFO may raise minimum pension under EPS-95
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






