இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ஜாக்பாட்! அடல் மாத ஓய்வூதிய தொகை உயர்த்தப்படுமா?

அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கான அடல் மாத ஓய்வூதிய தொகை உயர்த்தப்படுகிறது என்பது பற்றி

Atal Pension Yojana surpasses

அடல் மாத ஓய்வூதியம் - IANS

Published On :22 மே 2026, 6:02 pm IST

நாட்டில் அமைப்பு சாரா மக்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கும் அடல் மாத ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், மாத ஓய்வூதியத் தொகை உயர்த்தப்படுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

பணவீக்க சவால்களைச் சமாளிக்க, அடல் மாத ஓய்வூதியத் திட்டத்தில் ரூ. 5,000 என்ற உச்சவரம்பை அதிகரித்து வழங்க முடியுமா என்பதைத் தீர்மானிக்க, மறுபரிசீலனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அதாவது, அதிகபட்ச ஓய்வூதியத் தொகையான மாதத்திற்கு ரூ. 5,000 என்பதுகூட 15-20 ஆண்டுகளுக்குப் பிறகு போதுமானதாக இருக்காது என்று மக்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டுள்ளன. இது குறித்து பரிசீலனை செய்து முடிவெடுத்து, நடைமுறைக்கு வர சில காலம் ஆகும் என்றாலும் இது மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.

தற்போது அடல் மாத ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்திருக்கும் சந்தாதாரர்களில் சுமார் 80 சதவிகிதம் பேர் மிகக்குறைந்த ஓய்வூதியப் பிரிவான ரூ. 1,000 பிரிவில் உள்ளனர். ஆனால், இந்தத் தொகை போதுமானது இல்லை என்பதால் சிறந்த ஓய்வூதியத்தை உறுதி செய்வதற்காக, இந்த பிரிவினரை ரூ. 5,000 பிரிவுக்கு மாற்றுவதும் மத்திய அரசின் நோக்கமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடல் மாத ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?

மத்திய அரசின் நிதி ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டுவரும் அடல் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் (ஏபிஒய்) ஒருவர் ரூ.60 வயதுக்குப் பின் ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை ஓய்வூதியம் பெற முடியும்.

அமைப்புசாராத் துறைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் உள்பட 18 முதல் 40 வயதுக்குட்பட்ட அனைத்து இந்தியக் குடிமக்களும் 60 வயதுக்குப் பிறகு மாதம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை உத்தரவாத ஓய்வூதியம் பெறுவதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டத்தை கடந்த 2015-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகம் செய்தது.

வங்கிக் கணக்கு வைத்திருப்பவா்கள் இந்தத் திட்டத்தில் சோ்க்கப்படுவா். சந்தாதாரரின் இறப்புக்குப் பிறகு அவரது துணைவருக்கும், அதன் பிறகு அவரால் நியமிக்கப்பட்ட பயனாளிக்கும் (நாமினி) பலன்கள் தொடரும். 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதக் கணக்கின்படி இந்தத் திட்டத்தில் 8.66 கோடி சந்தாதாரா்கள் இணைக்கப்பட்டுள்ளனா். வருமான வரி செலுத்தும் நபர்கள் இந்த திட்டத்தில் இணைய முடியாது.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாதந்தோறும் செலுத்தும் தவணைத் தொகை மற்றும் இந்த திட்டத்தில் இணையும் வயதுக்கு ஏற்ப ஓய்வூதியம் கிடைக்கும். வயது அதிகமாக இருக்கும்போது இணைந்தால் மாதம் செலுத்த வேண்டிய தொகையும் அதிகரிக்கும்.

இந்தத் தொகையும் மாதம் அல்லது காலாண்டு அல்லது அரையாண்டுக்கு ஒரு முறை வங்கிக் கணக்கிலிருந்து தானாகவே எடுத்துக் கொள்ளப்படும். 60 வயது வரை இந்தத் தொகை கழிக்கப்படும்.

மாதம் ஆயிரம் ஓய்வூதியம் பெறுவதற்கு செலுத்த வேண்டிய தொகை விவரம்

Story image

இதுவே, மாதம் இரண்டாயிரம் ஓய்வூதியம் பெற வேண்டும் என்றால் தொகை இரட்டிப்பாகும். மூவாயிரம் என்றால் மும்மடங்கு, நான்காயிரம் என்றால் நான்கு மடங்கு அதிகமாக செலுத்த வேண்டும்.

அதாவது,

Story image

ஐந்தாயிரம் ரூபாய் மாத ஓய்வூதியமாகக் கிடைக்க ஐந்து மடங்கு தொகை செலுத்த வேண்டியது வரும்.

ஒருவேளை, 60 வயதுக்கு முன்பு, சந்தாதாரர் இறந்துவிட்டால், அவரது வாழ்க்கைத் துணை இந்த ஓய்வூதியம் சந்தாவை செலுத்தி, ஓய்வூதியம் பெறலாம். ஒருவேளை, சந்தா செலுத்தியவரும், வாழ்க்கைத்துணையும் இறந்துவிட்டால் அவர்கள் யாரை நியமிக்கிறார்களோ அவர்களுக்கு அந்த ஓய்வூதியத் தொகை வழங்கப்படும்.

Summary

Regarding the increase in the monthly pension amount for unorganized workers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.