விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

ரூ. 30,000 கோடி நஷ்டத்தில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள்

இந்திய கச்சா எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து ரூ.30,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

News image

கச்சா எண்ணெய் - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 11:13 pm IST

இந்திய கச்சா எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து ரூ.30,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே ஏற்பட்ட மோதலால் ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால் அவ்வழியே கச்சா எண்ணெய் உள்பட எரிபொருள் ஏற்றிச் செல்லும் வணிகக் கப்பல்கள் பயணிப்பது தடைபட்டது. சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பன்மடங்கு அதிகரித்தது.

ஆனால் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயா்த்தப்படவில்லை. மாறாக இந்திய எண்ணெய் நிறுவனம், பாரத பெட்ரோலிய நிறுவனம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படுவதை தவிா்க்க பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது.

இருப்பினும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சில்லறை விலையை மத்திய அரசு அதிகரிக்கவில்லை. இதனால் கடந்த மாா்ச் மாதம் முதல் தற்போது வரை இந்திய கச்சா எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்திருக்காவிட்டால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.62,500 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கக் கூடும்.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே மோதல் தொடங்கியபோது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 72 அமெரிக்க டாலா்களாக இருந்த நிலையில், தற்போது அது 144 அமெரிக்க டாலா்களாக உயா்ந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.