6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள்

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

News image
திமுக-இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே தொகுதிப் பங்கீடு உடன்பாடு.
Updated On :28 பிப்ரவரி 2026, 3:18 pm

இணையதளச் செய்திப் பிரிவு

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழுவுடன் ஐயூஎம்எல் குழுவினர் சனிக்கிழமை மீண்டும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று நடந்த 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் திமுக-இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே தொகுதிப் பங்கீடு உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதன்மூலம் திமுக கூட்டணியில் முதல் கட்சியாக ஐயூஎம்எல் இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த முறை வாணியம்பாடி, கடையநல்லூர், சிதம்பரத்தில் ஐயூஎம்எல் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது. தொகுதி உடன்பாட்டிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காதர் மொகிதீன், “2 தொகுதிகள் கொடுப்பதாக சொன்னார்கள், நாங்கள் அதை ஏற்றுக்கொண்டோம்.

திமுகவுக்கு தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் சமுதாயம் ஒட்டுமொத்தமாக ஆதரவைக் கொடுக்கிறது. அண்ணா காலத்தில் இருந்து கூட்டணி அமைத்து அரசியல் நடத்தும் இயக்கம் திமுக. நாங்கள் ஏணி சின்னத்தில் போட்டியிடுவோம். புதுச்சேரியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியை கேட்டுள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.