பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு.

News image

காதர் மொகிதீன், முதல்வர் ஸ்டாலின்

Updated On :21 பிப்ரவரி 2026, 11:41 am

இணையதளச் செய்திப் பிரிவு

வரும் பேரவைத் தேர்தலையொட்டி, தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுகவுக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், நாளை முதல் தொடங்கவுள்ளது

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்ப ங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்கும்படி திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு முதல்கட்டமாக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு, திமுக அழைப்பு விடுத்துள்ளது.

நாளைய பேச்சுவார்த்தையில் தொகுதிகள் எண்ணிக்கை, எந்தெந்த தொகுதிகள் என்பது இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது.

தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசுவதற்காக மதிமுகவில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், திமுகவில் குழு அமைத்தவுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்றும மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

அதேபோல, திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தவும், தோ்தல் அறிக்கை தயார்செய்யவும் , மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் தோழமை கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக தீவிரப்படுத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The DMK has invited the Indian Union Muslim League to hold talks regarding seat sharing.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.