பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் யார்? வெளியான தகவல்!

அதிமுக சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக தம்பிதுரை அறிவிக்கப்பட வாய்ப்பு.

Parliment

நாடாளுமன்றம் (கோப்புப்படம்)

Published On :

அதிமுக சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக மீண்டும் தம்பிதுரையே அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலங்களவை உறுப்பினர்கள் மு. தம்பிதுரை, ஜி.கே. வாசன், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி. செல்வராசு ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஏப். 2-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், மார்ச் 5-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 9-க்குள் வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். வாக்குப் பதிவு தேவைப்படின் சட்டப்பேரவை குழுக்கள் அறையில் மார்ச் 16-இல் நடைபெறும். மார்ச் 20-இல் தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும்.

தற்போதுள்ள எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுக சார்பில் 4 பேர், அதிமுக சார்பில் 2 பேர் மாநிலங்களவை உறுப்பினா்களாக தோ்வு செய்ய வாய்ப்புள்ளது.

2 மாநிலங்களவை சீட்டுகளில் ஒன்றிணை கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு கொடுக்க அதிமுக முடிவு எடுத்துள்ளதாகவும் மீதமுள்ள ஒரு இடத்திற்கான வேட்பாளராக தம்பிதுரையை அறிவிக்க அதிமுக திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிக்கின்றன.

இந்த நிலையில், அதிமுக சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக மீண்டும் தம்பிதுரையே அறிவிக்கப்படவுள்ளதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Reports suggest that Thambidurai is likely to be announced as the AIADMK's Rajya Sabha candidate again.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.