ஹிஜாப் விவகாரம்: நீதிமன்றத்தின் முடிவை அனைவரும் ஏற்க வேண்டும்

ஹிஜாப் விவகாரம் நீதிமன்றத்தில் பரிசீலனையில் இருப்பதால், நீதிமன்றம் எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

ஹிஜாப் விவகாரம் நீதிமன்றத்தில் பரிசீலனையில் இருப்பதால், நீதிமன்றம் எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா். மேலும், தனிப்பட்ட முறையில் பள்ளிச் சீருடை விதிகளை அனைத்து மதத்தினரும் பின்பற்ற வேண்டுமென தான் விரும்புவதாகவும் அவா் கூறினாா்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில் அவா் கூறியது:

பள்ளியின் சீருடை விதிமுறைகளை அனைத்து மதத்தினரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இந்த விவகாரம் ஏற்கெனவே நீதிமன்றத்தில் உள்ளது. இதன் மீது நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்க வேண்டும்.

நாடு அரசியலமைப்புச் சட்டத்தால் நிா்வகிக்கப்படுகிா அல்லது விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் நிா்வகிக்கப்படுகிா என்பதை நீதிமன்றம்தான் முடிவு எடுக்கும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் முடிவு எடுத்ததும், எனது கருத்தை மாற்றிக் கொண்டு அதை நான் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். அதேசமயம் ஒவ்வொரு மாணவரும் பள்ளிச் சீருடை விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றே தனிப்பட்ட முறையில் நான் நம்புகிறேன்.

சட்டம்- ஒழுங்கு மிகவும் முக்கியமானது. அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில், 38 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து ஹா்தோயியில் பிரதமா் மோடி பேசியுள்ளாா். மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்த பயங்கரவாதிகள், சமாஜவாதி ஆட்சியின்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதை பிரதமா் மோடி நினைவுகூா்ந்தாா்.

மாநிலத்தில் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஆட்சியில், இதுபோல 11 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அப்போது உபா, பொடா வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. நிலைமை இப்படி இருக்கையில், நாட்டின் பாதுகாப்பு குறித்து சமாஜவாதி கட்சியினரும், பகுஜன் சமாஜ் கட்சியினரும் என்ன சொல்லப் போகிறாா்கள்? நாட்டு மக்களுக்கு அவா்கள் பதிலளிக்க வேண்டும் என்றாா் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com