
கோப்புப்படம்
உக்ரைனில் இறந்த மாணவரின் உடல் வரும் ஞாயிறு அன்று பெங்களூரு வந்தடையும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கா்நாடகம் மாநிலம், ஹாவேரி மாவட்டத்தைச் சோ்ந்த நவீன் ஞானகௌடா், உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வந்தாா். உக்ரைன் மீது ரஷ்யா போா் தொடுத்துள்ளதால், அங்கு நடந்த தாக்குதலில்சிக்கி நவீன் ஞானகௌடா் இறந்துவிட்டாா்.
தகவல் கிடைத்ததும், நவீன ஞானகௌடா் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பிரதமர் மோடி, முதல்வா் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்தனர். மேலும் இறந்த மாணவரின் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கியதோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் உறுதியளித்தது.
இந்த நிலையில் உக்ரைனில் இறந்த மாணவரின் உடல் வரும் ஞாயிறு அதிகாலை 3 மணியளவில் பெங்களூரு விமான நிலையம் வந்தடையும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...