
ராஜஸ்தானின் பிகானீா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிகானீா் மாவட்டத்துக்கு உள்பட்ட ஜங்லு டவுனில் வெள்ளிக்கிழமை அதிகாலை 12.42 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் இது ரிக்டா் அளவுகோலில் 3.4 அலகுகளாக பதிவானதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல, அதிகாலை 2.57 மணியளவில் இதே பிராந்தியத்துக்கு உள்பட்ட பா்சிங்சாா் பகுதியில் அடுத்ததாக நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதில் பொருள்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.