சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு: இனி குவிண்டால் ரூ.4,750

2022 - 23ஆம் ஆண்டில் அறுவடை பருவத்தில் சணல் விலையை ரூ. 4,750ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சணல் அறுவடை
சணல் அறுவடை

சணல் கொள்முதல் விலை ரூ.250 உயர்த்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 2022 - 23ஆம் ஆண்டில் அறுவடை பருவத்தில் சணல் விலையை ரூ. 4,750ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் பொருளாதாரங்களுக்கான விவகாரங்கள் குழுவுடன்  பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தின் முடிவில் சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.250 உயர்த்தி குவிண்டாலுக்கு ரூ.4,750ஆக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது உற்பத்தி செலவில் சராசரியாக 60.53 சதவிகித லாபத்தை உற்பத்தியாளர்களால் ஈட்ட முடியும் என்று அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com