
புதுதில்லி: சுயசார்பு இந்தியா என்ற இலக்குடன் கூடிய இந்தியாவின் பயணத்திற்கு ஏற்றுமதி சாதனை ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்தி மோடி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவில், ரூ.30 லட்சம் கோடி அளவிற்கு சரக்கு ஏற்றுமதி வர்த்தகத்தில் நாடு சாதனை படைத்துள்ளதற்கு பாராட்டு தெரிவித்துள்ள மோடி, நாட்டின் 'சுயசார்பு இந்தியா' என்ற இலக்குடன் கூடிய பயணத்திற்கு ஏற்றுமதி சாதனை ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
"இந்தியா ரூ.30 லட்சம் கோடி அளவிற்கு ஏற்றுமதிக்கான லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது மற்றும் முதன்முறையாக இந்த இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது.
மேலும் இந்த வெற்றிக்காக பேருதவி புரிந்திட்ட விவசாயிகள், நெசவாளர்கள், உற்பத்தியாளர்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோருக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது சுயசார் இந்தியா பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல் என்று மோடி தெரிவித்துள்ளார்.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு ஒன்பது நாள்களுக்கு முன்னதாகவே இந்தியா இதுவரை இல்லாத அதிகபட்ச ஏற்றுமதி இலக்கை எட்டியதைக் குறிக்கும் கிராபிக்ஸ் ஒன்றை மோடி பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | பயணக் கட்டணம் உயர்கிறது: ஆட்டோவுக்கு ரூ. 30, டாக்ஸிக்கு ரூ.210 உயர்வு
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...