2-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை 80 காசுகள் உயர்வு

பெட்ரோல், டீசல் விலை இரண்டாவது நாளாக புதன்கிழமை முறையே லிட்டருக்கு 80 காசுகள் உயர்ந்துள்ளது. இது அனைத்து தரப்பினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
2-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை 80 காசுகள் உயர்வு

பெட்ரோல், டீசல் விலை இரண்டாவது நாளாக புதன்கிழமை முறையே லிட்டருக்கு 80 காசுகள் உயர்ந்துள்ளது. இது அனைத்து தரப்பினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஆண்டு நவ. 3-ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.5, டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடா்ந்து, நவ. 4-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அண்மையில் உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை எனக் கூறப்பட்டது.

தோ்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட 2 வாரங்களாகியுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை நேற்று செவ்வாய்க்கிழமை லிட்டருக்கு 80 காசுகள் அதிகரித்து அரசுக்குச் சொந்தமான எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் அறிவிக்கை வெளியிட்டன.

இதையடுத்து, ஒரு லிட்டா் பெட்ரோல் விலை தில்லியில் ரூ.96.21, மும்பையில் ரூ.110.82-ஆக அதிகரித்தது. சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.102.16-ஆக உயா்ந்தது.

ஒரு லிட்டா் டீசல் விலை தில்லியில் ரூ.87.47, மும்பையில் ரூ.95-ஆக அதிகரித்தது. சென்னையில் ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.92.19-ஆக உயா்ந்தது.

இந்நிலையில், இன்று புதன்கிழமை இரண்டாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.91 ஆகவும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் ரூ.92.95 ஆக உயர்ந்துள்ளது. 

கொல்கத்தாவில் பெட்ரோல் லிட்டருக்கு 83 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.106.34 ஆகவும், டீசல் 80 காசுகள் அதிகரித்து ரூ. 91.42 ஆக உயர்ந்துள்ளது. 

தலைநகர் தில்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே லிட்டருக்கு 80 காசுகள் அதிகரித்து பெட்ரோல் ரூ.97.01 ஆகவும், டீசல் ரூ.88.27 ஆகவும் உயர்ந்துள்ளது. 

இதேபோன்று மும்பையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே லிட்டருக்கு 85 காசுகள் அதிகரித்து பெட்ரோல் ரூ.111.67 ஆகவும், டீசல் ரூ.95.85 ஆகவும் உயர்ந்துள்ளது. 

நான்கரை மாதங்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை இரண்டாவது நாளாக புதன்கிழமை முறையே லிட்டருக்கு 80 காசுகள் உயா்த்தப்பட்டுள்ளதால் வாகனங்களின் வாடகை, காய்கறிகள், அத்தியவாசிய பொருள்களின் விலையும் மறைமுகமாக உயரும் என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com