'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்திற்கு வரி விலக்கு கேட்ட பாஜக...சட்டப்பேரவையை கலகலக்க வைத்த கேஜரிவாலின் பதில்

காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்திற்கு பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்கள் வரி விலக்கு அளித்துள்ளது.
தில்லி முதல்வர் கேஜரிவால்
தில்லி முதல்வர் கேஜரிவால்

தேசிய தலைநகர் தில்லியில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்திற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏக்கள் அம்மாநில சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தனர். அதற்கு தில்லி முதல்வர் கேஜரிவால் அளித்த பதில் சட்டப்பேரவையை கலகலக்க வைத்துள்ளது.

பாஜக எம்எல்ஏக்களின் கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய கேஜரிவால், "தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு அவர்கள் வரி விலக்கு கேட்கிறார்கள். நல்லது, யூடியூப்பில் பதிவேற்றுங்கள் அனைவரும் இலவசமாக பார்க்கலாம். அதற்கு ஏதற்கு எங்களிடம் வரி விலக்கு கேட்க வேண்டும்?

நீங்கள் அவ்வளவு ஆர்வமாக இருந்தால், படத்தை யூடியூப்பில் பதிவேற்றம் செய்யும்படி விவேக் அக்னிஹோத்ரியிடம் (இயக்குநர்) கேளுங்கள். அனைவருக்கும் இலவசமாகிவிடும். ஒரே நாளில் அனைவராலும் பார்த்து விட முடியும். வரி விலக்கு கேட்பதர்கான அவசியம் எங்கிருந்து வந்தது" என்றார்.

கேஜரிவாலின் பதிலை கேட்டு ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்கள் குலுங்கி குலுங்கி சிரிக்க தொடங்கி மேஜையை தட்டினர். உத்தரப் பிரதேசம், திரிபுரா, கோவா, ஹரியாணா, குஜராஜ், உத்தரகண்ட் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக அரசு ஆதரவு அளித்துவருகிறது. இந்த திரைப்படத்தை இயக்கிய விவேக் அக்னிஹோத்ரிக்கு மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com