நீதி வேண்டி நாடாளுமன்றத்தில் கதறி அழுத பாஜக எம்பி

பீா்பூமில் நடைபெற்ற வன்முறையில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என எட்டு பேர் கொல்லப்பட்டனர்.
கதறி அழுத பாஜக எம்பி
கதறி அழுத பாஜக எம்பி

மேற்கு வங்க மாநிலம், பீா்பூம் மாவட்டம் ராம்புராட் பகுதியில் பா்ஷால் கிராம ஊராட்சி துணைத் தலைவா் பாது ஷேக் என்பவரை அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் நாட்டு வெடிகுண்டுகளை வீசி திங்கள்கிழமை இரவு படுகொலை செய்தனா். இதையடுத்து, அந்தப் பகுதியில் இருந்த வீடுகள் திடீரென தீப்பற்றி எரிந்தன. இந்த சம்பவத்தில் 2 சிறார்கள் உள்பட 8 போ் தீயில் கருகி உயிரிழந்தனா்.

அந்த வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டதாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவற்றின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வீடுகள் தீப்பற்றி எரிந்தது தெரியவந்துள்ளது. பாது ஷேக்கின் கொலை காரணமாக வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வன்முறை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து மாநிலங்களவையில் பேசியபோது பாஜக எம்பி ரூபா கங்குலி கதறி அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க வன்முறை சம்பவம் குறித்து விரிவாக பேசிய அவர், "மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கோருகிறோம். அங்கு வெகுஜன மக்கள் கொலை செய்யப்படுகின்றனர். அங்கிருந்து மக்கள் வெளியேறுகிறார்கள். வாழ முடியாத இடமாக மாநிலம் மாறியுள்ளது.

மேற்கு வங்கத்தில் மக்களால் பேச முடியவில்லை. கொலையாளிகளை அரசு பாதுகாக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்று மக்களை கொன்று குவிக்கும் அரசு வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. நாம் மனிதர்கள். நாங்கள் ஒன்றும் கல் மனது பிடித்த அரசியலை செய்யவில்லை" என்றார்.

இதற்கிடையே, இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, சிபிஐ விசாரணக்கு அம்மாநில முதல்வர் மம்தா மறுப்பு தெரிவித்திருந்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com