இந்தியாவில் 1 கோடிக்கும் அதிகமான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

இந்தியாவில் 12-14 வயத்துக்குட்ட 1 கோடிக்கும் அதிகமான சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி முழு வீச்சில் செலுத்தப்பட்டு வரும் நிலையில், கடந்த 16-ம் தேதி முதல் 12-14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. இரண்டு தவணையாக போடப்படும் கோர்பவாக்ஸ் தடுப்பூசி 28 நாட்கள் கால இடைவெளியில் போடப்படுகிறது. 

அதன்படி, இந்தியாவில் 1 கோடிக்கும் அதிகமான சிறார்களுக்கு முதல் தவணையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது இதையடுத்து ஒட்டுமொத்தமாகப் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 182.83 கோடியாக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்துள்ளார். 

தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைத்து சிறார்களுக்கும் நன்றி. மேலும் இதே வேகத்தைத் தொடர்க என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com