சமூக நீதி: விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு பாஜக எம்பிக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

சமூக நீதியை உறுதி செய்ய அரசு எடுத்துள்ள முயற்சிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு
சமூக நீதி: விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு பாஜக எம்பிக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

புதுதில்லி: சமூக நீதியை உறுதி செய்ய அரசு எடுத்துள்ள முயற்சிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுமாறு பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வேண்டுகோள் விடுத்தார்.

அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் பாஜக தலைவர் பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா மற்றும் பாஜக எம்.பி.க்கள் கலந்து கொண்டு  உரையாற்றினார்.

சமூக நீதியை உறுதி செய்வதற்காக அரசாங்கம் தொடங்கியுள்ள பல்வேறு திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்த தங்களுடைய நாடாளுமன்றத் தொகுதியில் செய்தியாளர் சந்திப்பு, கருத்தரங்குகள் மற்றும் சிறு கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துமாறு  பிரதமர் கேட்டுக் கொண்டதாக பாஜக எம்.பி. கூறினார்.

நாட்டில் யாரும் பட்டினி கிடக்கக் கூடாது என்பதற்காக பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தை 6 மாதங்களுக்கு நீட்டித்ததற்காக பிரதமர் மோடிக்கு பாஜக எம்.பி.க்கள் நன்றி தெரிவித்ததாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூட்டத்திற்குப் பிறகு தெரிவித்தார்.

ஏப்ரல் 6 முதல் 14 வரை பாஜகவின் நிறுவன நாள் கொண்டாடப்படுகிறது.  இந்த நாளில் பல்வேறு நிகழ்ச்சிகள்  நடத்தவும், மக்களுடன் உரையாடவும் பிரதமர் மோடி, பாஜக தலைவர் நட்டா, பாஜக எம்.பி.க்கள் கேட்டுக் கொண்டனர்.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா, இலவச கோவிட் தடுப்பூசி மற்றும்  சமூக நீதிக்கான அரசாங்கத்தின் பல்வேறு முன்முயற்சிகளைப் பற்றி மக்களுக்குக் கூற நிகழ்ச்சிகளை நடத்த பாஜக எம்.பி.க்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று மெக்வால் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com