ஒடிசாவில் 34 புதிய நீதிமன்றங்கள் நிறுவப்படும்: அமைச்சர்

ஒடிசா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 34 நீதிமன்றங்களை நிறுவ அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில சட்ட அமைச்சர் பிரதாப் ஜெனா திங்கள்கிழமை தெரிவித்தார். 
ஒடிசாவில் 34 புதிய நீதிமன்றங்கள் நிறுவப்படும்: அமைச்சர்

ஒடிசா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 34 நீதிமன்றங்களை நிறுவ அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில சட்ட அமைச்சர் பிரதாப் ஜெனா திங்கள்கிழமை தெரிவித்தார். 

அமைச்சர் பிரதாப் ஜெனாவின் கூற்றுப்படி, 

நிதியமைச்சர் நிரன்ஜன் புஜாரி தலைமையிலான உயர்மட்டக் குழு புதிய நீதிமன்றங்களை நிறுவுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரிசா உயர் நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற்ற பிறகு, முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்றார். 

கஜபதி மாவட்டத்தில் பரலகெமுண்டியில் சிறப்பு (விஜிலென்ஸ்) நீதிமன்றத்தையும், புபனேஸ்வரில் 2, சோரா மற்றும் ஜலேஸ்வர், பாலசோர் மாவட்டத்தில், ஜார்ஜ்பூரில் உள்ள சண்டிகோலே, கோராபுட் மற்றும் ஆர் உதயகிரி ஆகிய இடங்களில் 7 கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்களை நிறுவுவதற்கு குழு ஒப்புதல் அளித்துள்ளது. 

இதேபோல் ஐந்து சிவில் (மூத்த பிரிவு)  நீதிமன்றங்கள், 11 சிவில் (ஜூனியர் பிரிவு) நீதிமன்றங்கள் மற்றும் ஒரு வருகைப் பதிவு நீதிமன்றம் உள்பட 10 வணிக நீதிமன்றங்கள் அமைக்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

மாநிலத்தில் இந்த நீதிமன்றங்களை அமைக்க ரூ.21.26 கோடி பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு வணிக நீதிமன்றங்கள் மற்றும் சிவில் நீதிபதி (மூத்த பிரிவு) நீதிமன்றத்தை நிறுவுவதற்கு மாநில அரசின் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஐந்து நீதிமன்றங்களுக்கும் சட்டத்துறை ஏற்கனவே அறிவித்து விட்டது.

ஒரிசா உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தபடி, மீதமுள்ள நீதிமன்றங்கள் படிப்படியாக நிறுவப்படும் என்று ஜெனா கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com