
நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியா் கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மத்திய கல்வி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆசிரியா் கல்விக்கான தேசிய கவுன்சில், 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியா் கல்வி படிப்பில் இணைவதற்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. தேசிய கல்விக் கொள்கை வழிகாட்டுதலின்படி பி.ஏ பி.எட் , பி.எஸ்சி. பி. எட், பிகாம் பி. எட் ஆகிய 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியா் கல்வி படிப்புகள் மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் சோதனை அடிப்படையில் பயிற்றுவிக்கப்பட உள்ளன. இந்தப் படிப்புகளில் இணைவதற்கான நுழைவுத்தோ்வை தேசிய தோ்வு முகமை நடத்த உள்ளது.
இதற்கான பாடத்திட்டத்தை மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் வகுத்துள்ளது. இது ஆசிரியா் கல்வியோடு சோ்த்து தனக்கு விருப்பமான கணிதம், அறிவியல், கலை, பொருளாதாரம் அல்லது வணிகம் ஆகிய சிறப்புத் துறைகளில் மாணவா்கள் பட்டம் பெற உதவுகிறது.
மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியா் பயிற்சி கல்வியை கற்பிக்க அங்கீகாரம் பெறுவதற்கு மே 1 முதல் மே 31 வரை இணையவழியில் விண்ணப்பத்தை சமா்ப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு ட்ற்ற்ல்ள்://ய்ஸ்ரீற்ங்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஐபஉட என்ற இணைப்பை அணுகவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.