
உள்துறை அமைச்சர் அமித் ஷா
நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரியை மாநிலங்களுக்கு விரைவாக கொண்டு செல்லும் நோக்கில், பல பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டு நிலக்கரி ஏற்றி வரும் ரயில்களுக்கு வழிவிடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மாநிலங்களில் நிலக்கரி கையிருப்பு, உற்பத்தி, விநியோகம் உள்ளிட்டவை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த ஆலோசனையில் மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே. சிங், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ், நிலக்கரித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.