யமுனோத்ரி கோயில் நடை மே 3ல் திறப்பு

யமுனா தேவியின் புகழ்பெற்ற கோயிலான யமுனோத்ரி கோயில் நடை மே 3-ம் தேதி திறக்கப்படும் என்று உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி திங்கள்கிழமை தெரிவித்தார். 
யமுனோத்ரி கோயில் நடை மே 3ல் திறப்பு

யமுனா தேவியின் புகழ்பெற்ற கோயிலான யமுனோத்ரி கோயில் நடை மே 3-ம் தேதி திறக்கப்படும் என்று உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி திங்கள்கிழமை தெரிவித்தார். 

இதுகுறித்து டிவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்ததாவது, 

அட்சய திருதியை முன்னிட்டு யமுனோத்ரி கோயில் நடை நாளை முதல் திறக்கப்பட்டு, மக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. பக்தர்கள் அனைவருக்கும் சார்தாம் யாத்திரை இனிமையைத் தர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

சார்தாம் தலத்தில் (கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்) யமுனோத்ரியும் ஒன்றாகும். இமயமலையில் உள்ள நான்கு தலங்களும் இந்துக்கள் மதிக்கப்படும் புனித யாத்திரையாகும். 

யமுனோத்ரி திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்களை வருகை தருகின்றனர். யமுனோத்ரியிலிருந்து கங்கோத்ரி, இறுதியாக கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் வரை செல்லும். கங்கைக்கு அடுத்தபடியாக இரண்டாவது புனித நதியாக யமுனைக்கு இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com