தில்லி மக்களுக்கு ஆறுதல்: இன்று முதல் வெப்ப அலை குறையும்

தில்லி மற்றும் வடமேற்கு இந்தியாவின் அருகிலுள்ள பகுதிகளில் வெப்ப அலை இன்று முதல் தணிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
தில்லி மக்களுக்கு ஆறுதல்: இன்று முதல் வெப்ப அலை குறையும்

தில்லி மற்றும் வடமேற்கு இந்தியாவின் அருகிலுள்ள பகுதிகளில் வெப்ப அலை இன்று முதல் தணிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில், 

கடந்த சில வாரங்களாக தில்லியை வாட்டி வதைத்து வந்த கடுமையான வெப்பம், இன்று முதல் சற்று தணியக்கூடும். இது தில்லி மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. 

அதிகபட்ச வெப்பநிலை 3-4 டிகிரி செல்சியஸ் குறையும் என்று கணித்துள்ளது.

தில்லியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல், பஞ்சாப், ஹரியானா-சண்டிகர்-தில்லி, தெற்கு உத்தரப் பிரதேசம், கட்ச் மற்றும் கிழக்கு ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இன்று முதல் வெப்பநிலை குறையும். 

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மேற்கு ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இன்னும் 24 மணி நேரத்திற்கு வெப்ப அலை நிலவும். மே 3 தேதி முதல் குறையும் என்று ஐஎம்டி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

வடமேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் மே 4 வரையும், வடகிழக்கு இந்தியாவில் மே 3 வரையும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கணித்துள்ளது. 

தில்லி, இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா-சண்டிகர், கிழக்கு ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். திங்கள்கிழமை முதல் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த சில வாரங்களாக, நாட்டின் சில பகுதிகள் கடுமையான வெப்ப அலையில் தத்தளித்து வருகின்றன. கடந்த 27 ஆண்டுகளில், கடந்த வாரத்தில் 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை பதிவானது. தேசிய தலைநகரில் 2வது முறையாக அதிக வெப்பநிலை ஏப்ரல் மாதத்தில் பதிவானது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com