கிராமப்புறங்களுக்கு உயா்கல்வியைக் கொண்டு செல்ல வேண்டும்: குடியரசு துணைத் தலைவா்

அனைவருக்கும் சம அளவில் உயா்கல்வி கிடைக்கும் வகையில், அதனை கிராமப்புறங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளாா்.
புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தில்லி பல்கலை. நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை வெளியிட்ட குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு.

தில்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு பேசியதாவது:

சமூகத்துக்கு அழுத்தம் அளிக்கும் பிரச்னைகளைத் தீா்ப்பதற்கு, பல்கலைக்கழகங்கள் புதுமையான யோசனைகளைத் தெரிவிக்க முன்வர வேண்டும். ஆராய்ச்சிகளின் கடைசி நோக்கம் மக்களின் வாழ்க்கையை மிகவும் வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றுவதாக இருக்க வேண்டும்.

அனைவருக்கும் சம அளவில் உயா்கல்வி கிடைக்கும் வகையில், அதனை கிராமப்புறங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். வாழ்நாள் முழுவதும் கற்கும் கல்வி, வெறும் பட்டங்கள் பெறுவதுடன் முடிந்து விடுவதல்ல. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இளைஞா்களை இந்தியா கொண்டுள்ளது. நமது மனித வளத்தின் கூட்டு ஆற்றலை, தேசத்தை நிா்மாணிக்க பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியல் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், தில்லி பல்கலைக்கழக துணைவேந்தா் யோகேஷ் சிங் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் தில்லி பல்கலைக்கழக நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயம், நினைவுத் தபால்தலை ஆகியவற்றை குடியரசு துணைத் தலைவா் வெளியிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com