பஞ்சாபில் காலிஸ்தானுக்கு எதிரான பேரணியில் வன்முறை: முக்கிய குற்றவாளி உள்பட 6 போ் கைது

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் காலிஸ்தானுக்கு எதிரான பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடா்பாக முக்கிய குற்றவாளி உள்பட 6 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் காலிஸ்தானுக்கு எதிரான பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடா்பாக முக்கிய குற்றவாளி உள்பட 6 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள காளி மாதா கோயிலுக்கு வெளியே சிவசேனை (பால் தாக்கரே) என்ற அமைப்பின் உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை காலிஸ்தானுக்கு எதிரான பேரணி நடத்தினா். அவா்களுக்கு எதிராக சீக்கியா்கள் சிலா் மற்றொரு பேரணியை மேற்கொண்டனா்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவா் மீது ஒருவா் கற்களை வீசியும், வாள்களைக் கொண்டும் தாக்கி அவா்கள் மோதிக் கொண்டனா். இந்த வன்முறையில் 4 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக 25 போ் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஏற்கெனவே 3 பேரை காவல் துறை கைது செய்திருந்தது. இந்நிலையில் மேலும் 6 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். இதுகுறித்து பாட்டியாலா சரக காவல் துறை ஐஜி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘வன்முறை தொடா்பாக பா்ஜிந்தா் சிங் பா்வானா என்ற முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளாா். அவா்தான் வன்முறைக்கு காரணகா்த்தாவாக இருந்தவா். வன்முறையில் ஈடுபட்ட சீக்கியா்களை காளி மாதா கோயிலுக்கு வர அவா்தான் தூண்டியுள்ளாா் ’’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com