ஜோத்பூரில் இந்து - முஸ்லிம் சமூகத்தினரிடையே மோதல்: இணைய சேவை துண்டிப்பு

ரமலான் கொண்டாட்டத்தின் இடையே ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் வெடித்ததால் அப்பகுதியில் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது. 
ஜோத்பூரில் இந்து - முஸ்லிம் சமூகத்தினரிடையே மோதல்: இணைய சேவை துண்டிப்பு

ரமலான் கொண்டாட்டத்தின் இடையே ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் வெடித்ததால் அப்பகுதியில் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஜலோரி கேட் பகுதி அருகே 3 நாள் பரசுராம் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதனிடையே இன்று முஸ்லிம் சமூகத்தினருக்கான ரமலான் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில் ஜலோரி கேட் அருகே திங்கள் இரவு இரு தரப்பினரும் தங்கள் கொடியினை ஏற்ற முனைப்பு காட்டியதால் மோதல் உருவானது. பின்னர் அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி தடியடி நடத்தினர். 

இந்த மோதலில் போலீஸ் பூத் ஒன்றின் மீதும் தாக்குதல் நடைபெற்றது. இதில் 4 போலீசார் காயமடைந்துள்ளனர். 

இதனால் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மோதலைத் தடுக்க அந்த பகுதி முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட ஜோத்பூரில் அன்பு மற்றும் சகோதரத்துவத்தைக் காக்க அனைத்து சமூகத்தினரும் அமைதி காக்குமாறு முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார். 

நேற்று இரவைத் தொடர்ந்து இன்று(செவ்வாய்) காலையும் இரு தரப்பினரிடையே கல் வீச்சு சம்பவம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com