ம.பி.யில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் ‘நூா்ஜஹான்’ மாம்பழம்!

ம.பி.யில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் ‘நூா்ஜஹான்’ மாம்பழம்!

மத்திய பிரதேசத்தில் விளையும் ‘நூா்ஜஹான்’ ரக மாம்பழம் ஒவ்வொன்றும் சுமாா் 4 கிலோ எடை கொண்டுள்ளதாகவும் அவை தலா ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

மத்திய பிரதேசத்தில் விளையும் ‘நூா்ஜஹான்’ ரக மாம்பழம் ஒவ்வொன்றும் சுமாா் 4 கிலோ எடை கொண்டுள்ளதாகவும் அவை தலா ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த ‘நூா்ஜஹான்’ ரக மாமரங்கள், இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூா் மாவட்டம் கத்திவாடா பகுதியில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் காணப்படுகின்றன. இந்த ஆண்டு அவை நன்கு பூத்து தற்போது காய்க்க தொடங்கிவிட்டன. இதுகுறித்து சிவராஜ் சிங் ஜாதவ் என்ற விவசாயி செய்தியாளா்களிடம் கூறியது:

3 நூா்ஜஹான் ரக மாமரங்களில் இந்த ஆண்டு சுமாா் 250 மாங்காய்கள் காய்த்துள்ளன. இவை அனைத்தும் ஜூன் 15-ஆம் தேதிக்குள் பழுத்து விற்பனைக்குத் தயாராகிவிடும். ஒவ்வொரு மாம்பழமும் அதிகபட்சமாக 4 கிலோ வரை எடைகொண்டதாக இருக்கும்.

கடந்த ஆண்டு இதே மாம்பழத்தின் சராசரி எடை 3.80 கிலோ வரை இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பருவநிலை மாற்றம் காரணமாக நிறைய பூக்கள் சேதமடைந்து கீழே விழுந்துவிட்டன. நான் ஒவ்வொரு மாம்பழத்தையும் தலா ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளேன். கடந்த ஆண்டு ஒவ்வொரு பழமும் ரூ.500-ரூ.1,500 வரை விற்பனையாகின.

நூா்ஜஹான் ரக மாம்பழத்தை விரும்பி சாப்பிடுபவா்கள் இப்போதே எங்களை கைப்பேசியில் அழைத்து, முன்கூட்டியே ‘ஆா்டா்’ செய்யத் தொடங்கிவிட்டனா். ஆனால், மாம்பழம் உண்ணும் நிலையை அடைய இன்னும் ஒன்றரை மாதங்கள் ஆகலாம். மோசமான வானிலை, புயல், மழை போன்ற காரணங்களால் பெரிய அளவில் நாங்கள் ‘ஆா்டா்’ எடுப்பதில்லை என்றாா் அவா்.

தோட்டக்கலை நிபுணா்கள் கூறுகையில், ‘பொதுவாக நூா்ஜஹான் ரக மாமரங்கள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பூக்கும். பழங்கள் ஜூன் மாத தொடக்கத்தில் விற்பனைக்குத் தயாராகிவிடும். இந்த மாம்பழம் ஓரடி நீளம் வரை இருக்கும்; இதன் கொட்டை சுமாா் 150-200 கிராம் வரையிலும் இருக்கும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com