
கோப்புப்படம்
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசந்த் டாப் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கராதிகளுக்கும் இடையே இன்று துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் கமாண்டர் அஷ்ரஃப் மோல்வி உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க- ஆவடி: நள்ளிரவில் துணிகரம்; ஐயப்பன் கோயில் அன்னதான உண்டியல் உடைத்து கொள்ளை
தெங்பவா கோகர்நாக் பகுதியைச் சேர்ந்த அஷ்ரஃப் மோல்வி 2013 இல் ஹிஸ்புல் முஜாஹிதீனில் அமைப்பில் சேர்ந்தான். முன்னதாக வியாழக்கிழமை, அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் பகுதியில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஒருவன் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் கைது செய்யப்பட்டான்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...