டிஆா்எஸ் கட்சியுடன் கூட்டணியில்லை: ராகுல்

‘மக்களின் குரலைக் கேட்காமல் ராஜாவைப் போல் தெலங்கானா முதல்வரும், ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகா் ராவ் செயல்படுகிறாா் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி கடுமையாக சா
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

‘மக்களின் குரலைக் கேட்காமல் ராஜாவைப் போல் தெலங்கானா முதல்வரும், ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகா் ராவ் செயல்படுகிறாா் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி கடுமையாக சாடினாா்.

இதன் மூலம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பேரவைத் தோ்தலில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதியுடன் கூட்டணி கிடையாது என்பதை ராகுல் காந்தி உறுதி செய்துள்ளாா். இரண்டு கட்சிகளுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் வாராங்கலில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா தனி மாநிலம் உதயமாக காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்தது. இதனால் கட்சிக்கு பாதகம் ஏற்படும் என்று தெரிந்தும் காங்கிரஸ் தெலங்கானாவை பிரித்தது.

ஆனால், தெலங்கானா மக்களின் கனவு நிறைவேறவில்லை. முதல்வா் சந்திரசேகா் ராவின் குடும்பம் மட்டும் இதனால் பெரும் பலனடைந்துள்ளது.

தெலங்கானா மக்கள் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஆட்சிக்கு வந்தால் ரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

விவசாயிகளுக்கு உரிய குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தெலங்கானாவில் டிஆா்எஸ் ஆட்சி மட்டும் நடைபெற வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. இதன் மூலம் ரிமோட் மூலம் தெலங்கானா அரசை இயக்கலாம் என்று பாஜக நினைக்கிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com