
கோப்புப்படம்
இந்தியாவில் புதிதாக 3,451 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. சனிக்கிழமை 3,805 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3,451 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 3,079 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 40 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | திமுகவின் ஓராண்டு ஆட்சி ஏமாற்றம்: எல். முருகன்
இதுவரை மொத்தம் 4,25,57,495 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,24,064 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 20,365 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
கடந்த 24 மணி நேரத்தில் 17,39,403 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 1,90,20,07,487 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...