கொழும்பில் வன்முறை: ஆளுங்கட்சி எம்.பி. பலி
கொழும்பில் வன்முறை: ஆளுங்கட்சி எம்.பி. பலி

கொழும்பில் வன்முறை: ஆளுங்கட்சி எம்.பி. பலி

இலங்கையில் நிட்டம்புவு பகுதியில்  போராட்டக்காரர்களை துப்பாக்கியால் சுட்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலா அடித்துக் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கொழும்பு: இலங்கையில் நிட்டம்புவு பகுதியில்  போராட்டக்காரர்களை துப்பாக்கியால் சுட்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலா அடித்துக் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிட்டம்புவு பகுதியில் போராட்டக்காரர்களை நோக்கி, அமரகீர்த்தி அதுகோரலா துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் போராட்டக்காரர்கள் மூன்று பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இலங்கையில் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

போராட்டக்காரர்கள் மீது நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதைப் பார்த்த மக்கள், அவர் மீது தாக்குதல் நடத்தியதில், அமரகீர்த்தி பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் ராஜபட்சவின் ஆதரவாளர்களை ஏற்றி வந்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

இலங்கையில், மகிந்த ராஜபட்ச பிரதமர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார். அவரது ஆதரவாளர்கள், இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு, போராடி வரும் மக்கள் மீது கண்மூடித்தனமான வன்முறையில் ஈடுபட்டதையடுத்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில், இலங்கை அதிபர் இல்லம் அருகே பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள காவல்துறையினருடன் ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் முக்கிய பகுதிகளில் மக்கள் கூடுதவதைத் தடுக்கும் வகையிலும், அமைதியை ஏற்படுத்தவும் ராணுவ தளபதி தலைமையில் ராணுவ வீரர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர்.

இதற்கிடையே, நிட்டம்புவு பகுதியில் ராஜபட்ச ஆதரவாளர்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களை விரட்ட காவல்துறையினர் தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதனால், இலங்கையின் முக்கிய நகரங்களில் பதற்றமான நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com